Have a question?
name would you need a hardcopy of the certificate mailed to you ?
Delete file
Are you sure you want to delete this file?
Message sent Close

Advaita Makaranda (Tamil)

அத்வைத மகரந்தம் என்பது ஒரு மனன கிரந்தம். சாதகர்களுக்கு, குறிப்பாக மனனம் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு, இது உன்னதமான கிரந்தம். இந்நூலின் ஆசிரியரான ஸ்ரீ லக்ஷ்மீதரகவி அவர்கள், ஞானத்திலும்
பக்தியிலும் எந்தளவு சிறந்து விளங்குபவர் என்பது அவருடைய படைப்புகளின் வழியாக வெளிப்படுகிறது.
  • Description
  • Curriculum
  • FAQ
  • Reviews

இப்பாடத்திட்டத்தைப் பற்றிய விவரங்கள்

அத்வைத மகரந்தம் என்பது ஒரு மனன கிரந்தம். சாதகர்களுக்கு,

குறிப்பாக மனனம் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு, இது உன்னதமான கிரந்தம். இந்நூலின் ஆசிரியரான ஸ்ரீ லக்ஷ்மீதரகவி அவர்கள், ஞானத்திலும் பக்தியிலும் எந்தளவு சிறந்து விளங்குபவர் என்பது அவருடைய படைப்புகளின் வழியாக வெளிப்படுகிறது.

வேதாந்தம் என்னும் மலரில் உள்ள அத்வைதம் என்னும் தேனை (மகரந்தத்தை) ஸ்ரீ லக்ஷ்மீதரகவி அவர்கள் எளிமையான யுக்திகளைப் பயன்படுத்தி, 28 செய்யுள்களே அடங்கிய அத்வைத மகரந்தம் என்னும் நூலாக அருளியுள்ளார்.

‘நான் ப்ரஹ்மம்’ என்ற அத்வைத வேதாந்தக் கருத்தில் உள்ள ஐயத்தைப் (சந்தேகத்தை) பல நியாயங்களைக் கையாண்டு நீக்கி ஐயமில்லா, தெளிவான ஞானத்தைத் தருவதே இந்நூலின் தனிச்சிறப்பாகும்.

இப்பாடத்தொகுப்பில் சுவாமி அத்வயானந்தா அவர்களின் 20 சொற்பொழிவுகள், 14 பாடங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இப்பாடத்தில் நீங்கள் பயிலப் போவது என்ன?

ஓர் சிறந்த சாதகன் குருமுகமாக அத்வைத ஞானத்தை ஶ்ரவணம் செய்த போதிலும், சந்தேகமிருப்பதால் திருப்தி அடைவதில்லை. எனவே ஸ்ரீ லக்ஷ்மீதரகவிகள் எளிய யுக்திகளின் மூலம் சந்தேகங்களைப் போக்கி தெளிவான ஞானத்தைத் தருகிறார்.

எப்பொழுதும் ‘நான்’ இருப்பதால் ஆத்மாவாகிய நான் ஸத்.

மூன்று அவஸ்தைகளையும் ‘நான்’ முழுமையாக அறிவதால் ஆத்மாவாகிய நான் சித்.

‘நான்’ எப்பொழுதும் எனக்கு ஆனந்தத்தை அளிக்க விரும்புவதால் ஆத்மாவாகிய நான் ஆனந்தம். ஆத்மாவின் ஸ்வரூபம் ஸச்சிதானந்தம்.

உபாதி என்றால் என்ன? உபஹிதம் மற்றும் விஶிஷ்டத்தின் வித்தியாசத்தை, சுவாமிஜி தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.

ஆத்மாவிற்கு ஸ்வத: நாசம், சம்யோக நாசம், ஆஶ்ரய நாசம் கிடையாது என்பதை யுக்தியின் மூலம் நிரூபித்துள்ளார்.

ஜாக்ரதாதி அவஸ்தைகளும் அவற்றின் இன்னல்களும் உபாதிக்கே, ஆத்மாவிற்குக் கிடையாது.

ஸத்–சித்–ஆனந்தம் என்பது ஆத்மாவின் குணமன்று, ஆத்மாவின் ஸ்வரூபம்.

ஸத்–சித்–ஆனந்தம் என்பது மூன்றன்று, ஒன்றுதான்.

முக்தி என்பது அடையக்கூடியதாக இருந்தால், ஒரு நாள் அழிந்துவிடும். ஆனால் நானோ எப்பொழுதும் முக்தனாக இருப்பதால், நான் நித்யமுக்தன்.

நான் ஏன் இப்பாடத்தை பயில வேண்டும்?

இந்நூல் “நான் ப்ரஹ்மமாக இருக்கிறேன்” என்ற அத்வைதக் கருத்தை, இரண்டற்ற நிலையைப் பல்வேறு சான்றுகளுடன் நிலைநாட்டுகின்றது.

இதன் வாயிலாக, சந்தேகமில்லாத, தெளிந்த அறிவு உண்டாகிறது.

இக்கருத்தை நாம் எளிதாகப் புரிந்துக்கொள்ள நம் அனுபவத்தையே சிறந்த யுக்தியாகவும், உரிய உதாரணங்களுடனும் விளக்கியுள்ளதால், நாம் வேதாந்த ஞானத்தைப் புரிந்து கொள்வது மட்டுமன்றி, அதில் நிஷ்டையுடன் நிற்கவும் இந்நூல் உதவுகிறது.

ஆதலால் அத்வைத வேதாந்த ஞானத்தில் நிலைத்து நிற்க விரும்பும் சாதகர்கள் ஒவ்வொருவரும் வேதாந்த ஶ்ரவணத்திற்குப் பிறகு கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம் ‘அத்வைத மகரந்தம்’.

நான் புத்தகத்தை எப்படி வாங்குவது?

மாணவர்கள், சென்ட்ரல் சின்மயா மிஷன் ட்ரஸ்ட் (CCMT) வெளியிட்டுள்ள அத்வைத மகரந்தம் ஆங்கில பிரதியை வாங்கும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

ஆங்கிலத்தில் அத்வைத மகரந்தம் பிரதியை வாங்க, இந்த இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்:

Advaita Makaranda

Or Contact: Sri M. Jayaraman Nair

In-charge, Chinmaya Vani, Chinmaya International Foundation (CIF) Ph: +91 92077 11138 / WhatsApp: 9207398313 / Email id: cifpublications@chinfo.org

தேவையானவை

  • அடிப்படை வேதாந்தம் அறிந்திருந்தால், இப்பாடங்களைப் புரிந்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கும், கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
  • நல்ல இணையதள இணைப்பு (Internet connection) தேவை.

பாடத்தின் சுருக்கம்

அத்வைத மகரந்தம் என்ற இப்பாடத்தொகுப்பு, 14 பாடங்களைக் கொண்டது. இப்பாடத்தின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • பாடம் 1: முன்னுரை
  • பாடம் 2: மங்களாசரணம்
  • பாடம் 3: ஆத்மாவின் லக்ஷணம் ஸச்சிதானந்தம்
  • பாடம் 4: ஆத்மா ஸர்வக்ஞனாகவும் ஸர்வ காரணமாகவும் உள்ளது
  • பாடம் 5: ஆத்மாவுக்கு அழிவில்லை
  • பாடம் 6: ஆத்மா ஸர்வகம், அத்வயம்
  • பாடம் 7: ஆத்மா நித்யமுக்தன் – 1
  • பாடம் 8: ஆத்மா நித்யமுக்தன் – 2
  • பாடம் 9: ஆத்மா நிர்விகாரன்
  • பாடம் 10: ஆத்மாவை அக்ஞானம் மறைக்காது
  • பாடம் 11: அக்ஞானத்தின் விளைவால் தோன்றும் விப்ரமங்கள்
  • பாடம் 12: ஸாக்ஷியாகிய ஆத்மா ப்ரஹ்மம், நிர்மலம்
  • பாடம் 13: ஆத்மாவினுடைய ஸ்வரூபம் ஸச்சிதானந்தம்
  • பாடம் 14: மஹாவாக்கிய விசாரம் மற்றும் பலன்

Click here for a detailed Course Content

அத்வைத மகரந்த பாடத்தின் பங்களிப்பாளர்கள்

ப்ரஹ்மசாரிணி பாரதி சைதன்யா
சுவாமினி ஸம்ப்ரதிஷ்டானந்தா
சுவாமி ஷாஷ்வதானந்தா

பாடம் 3: ஆத்மாவின் லக்ஷணம் ஸச்சிதானந்தம்
பாடம் 4: ஆத்மா ஸர்வக்ஞனாகவும் ஸர்வ காரணமாகவும் உள்ளது
பாடம் 6: ஆத்மா ஸர்வகம், அத்வயம்
பாடம் 8: ஆத்மா நித்யமுக்தன் – 2
பாடம் 9: ஆத்மா நிர்விகாரம்
பாடம் 10: ஆத்மாவை அக்ஞானம் மறைக்காது
பாடம் 11: அக்ஞானத்தின் விளைவால் தோன்றும் விப்ரமங்கள்
பாடம் 12: ஸாக்ஷியாகிய ஆத்மா ப்ரஹ்மம், நிர்மலம்
பாடம் 13: ஆத்மஸ்வரூபம் ஸச்சிதானந்தம்
பாடம் 14: மஹாவாக்கிய விசாரம் மற்றும் பலன்