Have a question?
name would you need a hardcopy of the certificate mailed to you ?
Delete file
Are you sure you want to delete this file?
Message sent Close
Guru Purnima Offer for Home Study Courses valid from 25 July to 3 August 2026 – Click to Take the Quiz and Avail the Coupon Code.
Introduction to Mahabharata Course – Click to Know More
Vedanta Vijnana Course – Click to Know More
Chinmaya Amrit Mahotsav - Global Sammelan - Click to Register Now

pakkuvaAchAra Thiruppugazh

Viewing 0 reply threads
  • Author
    Posts
    • #642015
      CIF Admin
      Keymaster

      தத்தன தானான தத்தன தானான
      தத்தன தானான …… தனதான

      ……… பாடல் ………

      பக்குவ வாசார லட்சண சாகாதி
      பட்சண மாமோன …… சிவயோகர்

      பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு
      பற்றுநி ராதார …… நிலையாக

      அக்கண மேமாய துர்க்குணம் வேறாக
      அப்படை யேஞான …… வுபதேசம்

      அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு
      னற்புத சீர்பாத …… மறவேனே

      உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல
      வுற்பல வீராசி …… மணநாற

      ஒத்தநி லாவீசு நித்தில நீராவி
      யுற்பல ராசீவ …… வயலூரா

      பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
      பொற்ப்ரபை யாகார …… அவிநாசிப்

      பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான
      புக்கொளி யூர்மேவு …… பெருமாளே.

      பதம் பிரித்தல்
      ===============
      பக்குவ ஆசார லட்சண சாக ஆதி
      பட்சண மாமோன …… சிவயோகர்,

      பத்தியில் ஆறுஆறு தத்துவ மேல்வீடு
      பற்று நிராதாரம் …… நிலையாக,

      அக்கணமே மாய துர்க்குணம் வேறுஆக,
      அப்படையே ஞான …… உபதேசம்,

      அக்குஅற வாய்பேசு சற்குரு நாதா! உன்
      அற்புத சீர்பாதம் …… மறவேனே,

      உக்கிர ஈர்ஆறு மெய்ப் புயனே! நீல
      உற்பல வீராசி …… மணம்நாற

      ஒத்த நிலாவீசு நித்தில நீராவி
      உற்பல ராசீவ! …… வயலூரா!

      பொக்கம் இலா வீர விக்ரம! மாமேனி
      பொற்ப்ரபை ஆகார! …… அவிநாசிப்

      பொய்க்கலி போமாறு,மெய்க்குஅருள் சீரான
      புக்கொளியூர் மேவு …… பெருமாளே!

Viewing 0 reply threads
  • You must be logged in to reply to this topic.