Have a question?
name would you need a hardcopy of the certificate mailed to you ?
Delete file
Are you sure you want to delete this file?
Message sent Close
Get 25% OFF on Shravana Mangalam products! Use coupon code “Gurudev25” on Upanishads with Sankara Bhashya, Saundarya Lahari Albums & Brahmasutra Albums.
Introduction to Mahabharata Course – Click to Know More
Vedanta Vijnana Course – Click to Know More
Chinmaya Amrit Mahotsav - Global Sammelan - Click to Register Now

varbarvargal olai

Viewing 0 reply threads
  • Author
    Posts
    • #640288
      CIF Admin
      Keymaster

      வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று
      மடிபிடிய தாக நின்று – தொடர்போது

      மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று
      வசைகளுட னேதொ டர்ந்து – அடைவார்கள்

      கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்து
      கரியபுன லேசொ ரிந்து – விடவேதான்

      கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு
      கடுகிவர வேணு மெந்தன் – முனமேதான்

      பரகிரியு லாவு செந்தி மலையினுட னேயி டும்பன்
      பழநிதனி லேயி ருந்த – குமரேசா

      பதிகள் பல வாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற
      பதமடியர் காண வந்த – கதிர்காமா

      அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை
      யணிவர் சடை யாளர் தந்த – முருகோனே

      அரகரசி வாய சம்பு குருபரகு மார நம்பு
      மடியர்தமை யாள வந்த – பெருமாளே

      பதம் பிரித்தது

      தனதனன தான தந்த தனதனன தான தந்த
      தனதனன தான தந்த – தனதான

      வருபவர்கள் ஓலை கொண்டு நமனுடைய தூதரென்று
      மடிபிடிய தாக நின்று – தொடர்போது

      மயலதுபொலாத வம்பன் விரகுடையனாகுமென்று
      வசைகளுடனேதொடர்ந்து – அடைவார்கள்

      கருவியதனாலெ றிந்து சதைகள்தனையே யரிந்து
      கரியபுனலேசொ ரிந்து – விடவேதான்

      கழுமுனையி லேயி ரென்று விடுமெனும் அ(வ்) வேளை கண்டு
      கடுகிவர வேணு மெந்தன் – முனமேதான்

      பரகிரியுலாவு செந்தி மலையினுடனே இடும்பன்
      பழநிதனிலேயிருந்த – குமரேசா

      பதிகள் பல வாயிரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற
      பதமடியர் காண வந்த – கதிர்காமா

      அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை
      அணிவர் சடையாளர் தந்த – முருகோனே

      அரகரசிவாய சம்பு குருபரகு மார நம்பு
      மடியர்தமை யாள வந்த – பெருமாளே

Viewing 0 reply threads
  • You must be logged in to reply to this topic.